
அக்கறைப்பற்றில் பெண் குழந்தையொன்றை கொடூரமாக தாக்கிய சம்பவம் பலரையும் பதறவைத்துள்ளது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு வயது பெண் குழந்தையொன்றினை தாக்கிய காணொளியே இவ்வாறு வெளியாகியுள்ளது.
அக்கறைப்பற்றில் வசிக்கும் பெண் குழந்தை தனது கும்பத்தின் பசியை போக்குவதற்காக, கடையொன்றில் இருந்து பிஸ்கெட் பைக்கெற்றுகளை திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சிறுமி, திருட்டில் ஈடுபட்டு சிக்கிய நிலையில், அங்கிருந்த மக்கள் அவரின் காலில் ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அக்குழந்தை திருடியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக வேதனை வெளியிடப்பட்டுள்ளது.





