
நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அல்லற்படும் நேரத்தில் இன்று கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஆடம்பர வாகனப் பேரணி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது.
அரச தரப்பினர் மற்றும் பிரமுகர்கள் சொகுசு வாகனங்களிலும், சொகுசு மோட்டார் சைக்கிள்களிலும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று கற்பிட்டி வரை சென்றுள்ளனர்.
குளியாப்பிட்டி மாதம்பை ஊடாக ஆரம்பித்த இந்த ஆடம்பர வாகனப் பேரணி, பாலாவி ஊடாக கற்பிட்டியைச் வந்தடைந்தது. இதன் போது வாகன கோன்கள் பாரிய சத்தத்துடன் ஒலி எழுப்பப்பட்டு அணிவகுத்து சென்றுள்ள காணொலிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அத்தோடு கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.





