மஹிந்தவின் படத்தால் யாழில் பதற்றம்!

யாழில் நபர் ஒருவர் வங்கிலிருந்து மஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட, புதிதாக வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத்தாளை பெற்றுள்ளார்.

பின்னர் கொக்குவில் பகுதியிலுள்ள பூட்சிற்றி ஒன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு குறித்த நாணயத்தாளை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நாணயத்தாள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லையென பூட்சிற்றியில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இது அரசின் பணம். நான் வங்கியிலிருந்து பெற்றேன். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர் தர்க்கம் புரிந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் பேஸ்புக், டிக் டொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply