திருகோணமலையில் வான் – மோட்டார் சைக்கிள் விபத்து

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள போட்டன்காடு சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிள் – வான் ஆகியன மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கந்தளாய் போட்டன்காடு சந்தியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply