கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு. மார்ச் 18

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்கள் கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்புவதாக, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் சிறப்பு அங்காடிகளையும், வீடுகளையும் உடைத்து பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.இந்தநிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply