
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய ஈழத்து விஞ்ஞானி நேற்றைய தினம் இயற்கை மரணம் எய்தினார்.
நாசாவில் நீண்ட காலம் கடமையாற்றி குப்பிளான் மண்ணுக்கும், ஈழ மண்ணுக்கும் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமியே இவ்வாறு காலமானவராவார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை தனது 90 வது வயதில், அமெரிக்காவில் காலமானார்.
1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்த தமிழ் விஞ்ஞானியான வைத்திலிங்கம் துரைசாமி பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது





