அரசின் செல்வாக்கு சரிகிறதா? புலனாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

கொழும்பு, மார்ச் 18

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கையானது அரசுக்கு அவ்வளவு நல்லதாக இல்லை என்றே கூறப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வருகின்றது எனவும், தீவிர ஆதரவை வெளிப்படுத்தியர்கள்கூட மாற்றுவழியை நாடுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு 17 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அரசின் வாக்கு வங்கிக்கு ஏற்படும் தாக்கம் பற்றி தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது எனவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

Leave a Reply