அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இதன்படி சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை தொழினுட்ப கல்லூரி சந்தியில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எராங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23 ஆம் திகதி நுகேகொடை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதி பொலன்னறுவையில் விவசாயிகள் தலைமையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply