
எம்பிலிப்பிட்டிய, மார்ச் 18
எம்பிலிப்பிட்டிய – செவனகல – நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இந்த நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. டபிள்யூ.இ. சரத் என்ற 48 வயதான இந்த நபர் தான் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.





