அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் பூமியோ கிசிடா!

ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகைத் தரவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று அவர் மார்ச் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது டெல்லியில் நடைபெறும் இந்திய – ஜப்பானிய மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி , ”இரு நாடுகள் இடையே பல துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மறு ஆய்வு செய்யவும்,  மேலும் வலுப்படுத்தவும் இந்திய ஜப்பானிய மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply