பிரபாகரன் இருந்திருந்தால் அவரிடம் கடன் வாங்கி இருக்கலாம் – இராணுவ சிப்பாய் ஆதங்கம்

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் அவர்களிடம் கடன் வாங்கி இந்த நாட்டை பாதுகாத்திருக்கலாம் என முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் .

மேலும் தெரிவிக்கையில் ,

நான் இராணுவ சேவையில் இருந்தவன், இந்த நாட்டில் ஒரு பகுதியை கேட்ட பிரபாகரன் அவர்களுடன் 20 வருடம் யுத்தம் செய்தோம்.

என்ன நடந்தது தற்போது எங்களுடைய உரிமை விற்கப்பட்டு விட்டது. அந்த மனிதரிடம் வடக்கு,கிழக்கை கொடுத்திருந்தால் அவர்களிடம் நாம் கடன் வாங்கி இந்த நாட்டை பாதுகாத்திருக்கலாம் .

இவ்வாறு முன்னாள் இராணுவ சிப்பாய் தெரிவித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply