குறிஞ்சாக்கேணி பால நிர்மான நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் படகு விபத்தொன்று ஏற்பட்டு எட்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதே பாலத்தின் மாற்று வழி ஊடாக மக்கள் தற்போது பயணித்தாலும் கூட பாதுகாப்பற்ற நிலை இங்கு காணப்படுகிறது.

கடற்படை மூலம் வழங்கப்பட்ட படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமான பஸ் சேவை இடம் பெறுகிறது .

இதனை கருத்திற் கொண்டு இப் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply