காலவரையறையின்றி மீண்டும் மூடப்பட்டது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

<!–

காலவரையறையின்றி மீண்டும் மூடப்பட்டது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! – Athavan News

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு முன்னரும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக இரண்டு தடவைகள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply