நாட்டை அண்மிக்கும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை மறுதினம் நாட்டை அண்மிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் மு.னு.சு.ஒல்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. கப்பலில் அடங்கியுள்ள டீசலை எதிர்வரும் திங்கட்கிழமை தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதற்கமைய, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியும்.

பொதுமக்கள் அநாவசியமான முறையில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ததால், அதனை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply