ரயில் பயணக்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் திங்கள் தீர்மானம்

கொழும்பு, மார்ச் 19

ரயில் பயணக் கட்டணம் தொடர்பில் தீர்மானிக்கும் குழுவின் அறிக்கை, தமக்கு கிடைத்துள்ளதென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திலும் அமுனுகம கூறியதாவது,

அதன் அறிக்கை தொடர்பான கலந்துரையாடல், வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. எரிபொருள் விலையேற்றத்துடன், கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும். எனினும், தற்போது அது பேச்சுவார்த்தை மட்டத்திலே உள்ளது.

இதேநேரம், தொடருந்துகளின் இயக்கத்துக்கு, எரிபொருள் பிரச்சினை இதுவரையில் தாக்கம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply