கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை! – கம்பஹாவில் கொடூரம்

கம்பஹா – ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டலந்த பிரதேசத்தில், கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

வல்பொல, ராகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்ய்பட்டுள்ளனர்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் குறித்த நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply