பிரதமரின் வருகையை முன்னிட்டு யாழில் கடும் பாதுகாப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ். நாகவிகாரைக்கு சற்றுமுன் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் யாழில் பெருமளவில் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாவற்குழி, கந்தரோடை, நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply