சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கும் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில

கொழும்பு, மார்ச் 19: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு இணங்க இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

எனினும், இந்த மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது கட்சிகளின் யோசனைகளும் பரிந்துரைகளும் கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply