100 ரூபாவை தாண்டும் பால் தேநீரின் புதிய விலை!

ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை சுமார் 600 ரூபாவினால் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இந்தநிலையில், பால் தேநீர் விநியோகத்திலிருந்து முற்று முழுதாகவே விலக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், நுகர்வோரிடமிருந்து முறையற்ற விதத்தில் அறவீடுகளை மேற்கொள்ள முடியாது.

பால்மா விநியோகத்தர்களின் தகவல்களுக்கு அமைய, 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மா பக்கட் ஒன்றின் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பால் தேநீர் ஒன்றின் புதிய விலை 100 ரூபாவை தாண்டும்.

எனவே, இவ்வாறு நுகர்வோரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்தார்

Leave a Reply