வடக்கு மக்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்! மகிந்த தெரிவிப்பு

வடக்கு மக்களைப் பாதுகாத்து அந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், நயினா தீவு ரஜமஹா விகாரையில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

அங்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாத்ரீகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை விரிவுப்படுத்தி நயினாதீவு ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply