நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மூலங்கள் அத்தாட்சிப்படுத்தப்பட்டன

கொழும்பு, மார்ச் 20: கடந்த நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அத்தாட்சிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் தரவு பாதுகாப்பு, தொழிலாளர் இழப்பீடு, காணி அபிவிருத்தி ஆகிய சட்டமூலங்கள் இவ்வாறு சட்டமாக்கப்பட்டு இலங்கையின் நீதித்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டங்கள் நேற்று முதல் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தரவுத்தள வழங்குநர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு அதனை வலுப்படுத்தும் நோக்கில் தனியார் தரவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் இழப்பீட்டு திருத்தச் சட்டத்தின் ஊடாக 550,000 ரூபாவாக காணப்பட்ட தொழிலாளர் இழப்பீட்டு தொகை 20 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

அது தற்போது பணிக்கும் செல்லும் போது அல்லது திரும்பும் போது ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply