பிரதமர் மகிந்த ராஜ பக்ச யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மட்டுவில் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பொருளாதார மத்திய நிலையம் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்ட பேரணி ஆரம்பமாகி முன்னோக்கி நகர்ந்து செல்கையில்,பொலிஸார் உட்பட படையினர் போராட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
இதன் போது தடி அடி நடத்த முற்பட்ட நிலையில், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களின் தலை முடியில் பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.







