உஸ்வெட்டகெயியாவ கடலில் மூழ்கிய நபரை காணவில்லை! தேடும் பணிகள்  தீவிரம் 

கம்பஹா பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்வெட்டகெயியாவ கடலில் குளிப்பதற்காக இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளதுடன் அதே பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபர் காணாமல் போயுள்ளார்.

குறித்த இருவரும் நேற்றைய தினம் குளிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply