கொலைகார ராஜபக்சாக்களே எங்களை வாழவிடு! – யாழில் தொடர் போராட்டம்

பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்ட நிலையில் ,இன்றைய தினம் மட்டுவில் பகுதியில் பொருளாதார மத்திய மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு முன்பாக போராட்ட பேரணி சென்றது.

இதனால் அங்கு பொலிஸார் பேரணியை கலைக்க முற்பட்ட வேளை அது கலவரமாக மாறியது.பொலிஸாரால் பெண்கள் தாக்கப்பட்டு அநாகரிகமாக நடத்தப்பட்டனர்.

இதனை அடுத்து பொலிஸாரின் அராஜகத்துக்கு எதிராகவும்,ராஜபக்சாக்களின் ஆட்சிக்கு எதிராகவும் குறித்த இடத்தில் மேலும் ஒரு போராட்டம் இன்று மத்திய முன்னெடுக்கப்பட்டது.

“தமிழ் மக்களை கொல்லாதே”,”எங்களை வாழ விடு “.ஒரு லட்சம் வேண்டாம் “,”உறவுகள் எங்கே” ஆகிய பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply