எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு

தேனி சஞ்சிகை மற்றும் தேனி இணையதளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரனின் (ஜெமினி) , முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) ஜெர்மன் கிளையின் சுமார் 60,000 ரூபா நிதிப் பங்களிப்பில் குறித்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

கழகத்தின் எழுவைதீவு செயற்பாட்டாளர் ஆசிரியர் அன்ரன் றகீன்றாஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கழகத்தின் லண்டன் கிளை தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் (பாலா), சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எழுவைதீவு பிறீமியர் லீக் நிர்வாக உறுப்பினர்களுடன் லீக் போட்டிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply