குடியிருப்பின் மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீவிபத்து! மூவர் காயம் 

கொழும்பு – கொட்டாஞ்சேனை – புளுமென்டல் தொடர்மாடி குடியிருப்பின் மூன்றாம் மாடியில் நேற்று (20) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த விபத்தில் மூவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரே சிறியளவில் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹெட்டியாவத்தை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply