<!–
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2.8 பில்லியன் டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்கும் கடன் கோரப்பட்டதாக கடந்த வாரம் ஆதவன் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






