கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியருக்குப் பிணை

கொழும்பு, மார்ச் 21

பொரளை அனைத்து பரிசுத்தவான் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஓய்வுபெற்ற வைத்தியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply