காலியில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு!

காலி- அஹங்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து காலி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், லொறியை முந்திச் செல்ல முயன்றபோதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply