மட்டக்களப்பில் எரிவாயுவுக்காக 4 மணித்தியாலங்களாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப்பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலையுள்ளதுடன் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசல் வழங்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் குறித்த எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நின்று எரிபொருளைப்பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதேநேரம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு நகரின் பயனியர் வீதியில்  எரிவாயு விநியோகம் நடவடிக்கை நடைபெறும் மக்களுக்கு கிடைத்த அநாமதேய தகவல்கள் காரணமாக பெருமளவான மக்கள் அப்பகுதியில் கூடியதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

குறித்த வீதியில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் எரிவாயு சிலிண்டருடன் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் நின்ற நிலையில் எரிவாயு விநியோகம் நடைபெறாத காரணத்தினால் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

நாளை மறுதினம் குறித்த பகுதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்படும் என மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் பல உணவகங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply