எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

கொழும்பு,மார்ச் 22

கப்பலிலிருந்து 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

கெரவலபிட்டிய முனையத்தினூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றும் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறித்த எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எரிவாயுவை ஏற்றிய மேலும் 2 கப்பல்கள் எதிர்வரும் வியாழன்(24) மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் (25) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது

Leave a Reply