இனியும் தமிழரை சீண்டினால் மீண்டும் வீரியம் மிக்க போராட்டம் வெடிக்கும்!

பொலிஸாரின் அடக்குமுறைகள் தொடர்ந்தால் வீரியம் கூடியதான போராட்டம் ஒன்று மீண்டும் வெடிக்கும் என மானிப்பாய் பிரதேச தவிசாளர் அ. ஜெபினேசன் தெரிவித்தார்.

சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மகிந்தராஜபக்ஷ நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போது, அரசாங்கத்துக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.

இப்போராட்டத்திலே காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அதில் இரண்டிற்கு மேற்பட்ட தாய்மார்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனல். அவர்களுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும். மேலும் ஆதரவினை வழங்குமாறும் மானிப்பாய் பிரதேச தவிசாளர் அ.ஜெபினேசன் தெரிவித்திருந்தார்..

Leave a Reply