இந்தியக் கடனின் கீழான முதலாவது கப்பல் வந்தது!

இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது எரிபொருள் தொகுதியுடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்த கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் காணப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் உள்ள எரிபொருள் கொலன்னாவ களஞ்சியசாலையில் தரையிறக்கப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனை விரைவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply