
நாட்டில் வரிசையில் எரிபொருள் வரிசை குறைந்து விட்டது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சராக பதவியேற்கும்போதே எரிபொருள் பற்றாக்குறை நிலை காணப்பட்டது. அதன் பின்னர் தற்போது அந்த நிலைமை குறைவடைந்து செல்கிறது. ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு இரண்டு புவுசர்கள் வீதம் அனுப்பப்படுகிறது.
இதனால் இப்போது வரிசை குறைந்து செல்கிறது. மக்கள் தட்டுப்பாடு என நினைத்துக்கொண்டு அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்து சேமிக்கின்றனர். இதனால் தற்காலிக தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எரிபொருள் தரத்தில் மாற்றம் இல்லை. கொலன்னாவ மற்றும் அங்கீகாரம் பெற்ற ஆய்வு கூடங்களில் அவை பரிசோதனை செய்த பின்னரே விநியோகிக்கப்படுகிறது.- என்றார்.





