பிரதமர் தலைமையிலான குழு இத்தாலிக்கு பயணம்!

<!–

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலிக்கு பயணம்! – Athavan News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இத்தாலிக்கு செல்லவுள்ளனர்.

இத்தாலி – போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இத்தாலிக்குச் செல்லவுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது பாப்பரசரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் இலங்கை தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply