நீங்களும் வேண்டாம் ,உங்கள் கட்சியும் வேண்டாம் – சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல்

இலங்கை பாராளுமன்றில் இரண்டாம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வில் பல திருப்பங்களை எதிர் பார்ப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சுப் பதவியிலிருந்து ,தூக்கி எறியப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சி வேண்டாம் என தெரிவித்து , ஆளும் கட்சி வரிசையிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி ஆசன வரிசையில் அவர்கள் அமரலாம் .

நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply