பங்கபந்து தொடரில் வெற்றி நடைபோடும் இலங்கை கபடி அணி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் தொடரில் லஹிரு சம்பத் தலைமையிலான இலங்கை ஆண்கள் கபடி அணி,மலேசியா மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது .

இலங்கை அணி தனது லீக் சுற்று ஆட்டங்களில் 44-19 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை வீழ்த்திய அதேவேளை,53-26 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

இந்த இரண்டு வெற்றிப் போட்டிகளிலும் இலங்கையைச் சேர்ந்த அஸ்லம் ராஜா மற்றும் எல்.தனுஷன் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றனர் .

தொடரில் பங்கேற்றுள்ள நாடுகளான பங்களாதேஷ்,இலங்கை,மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பிரிவு ‘ஏ’ இல் இடம்பெற்றுள்ளன.

கடந்த போட்டித் தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்ற கென்யா ,நேபாளம்,ஈராக் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை பி பிரிவில் உள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன் இலங்கை வீரர்களுக்கு இந்தப் போட்டி தங்களது திறமையை சோதித்துப் பார்க்க நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply