கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

கண்டி – கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று(புதன்கிழமை) அதிகாலை பரவிய தீயினால் 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளன.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும், மேலும் ஒரு இளைஞன் ஆகியோர் உயிரிழந்துடன், தாய் காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply