
சித்திரைப் புத்தாண்டின் முன்னதாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய வரவு = செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு பல்வேறு நாடுகளிடம் இலங்கை கையேந்திவரும் நிலையில், நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தத் தகவலை நேற்று நடந்த சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவை முன்வைத்த புதிய வரவு = செலவுத் திட்ட யோசனையை தாம் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும்வகையில் இந்த வரவு =செலவுத் திட்டம் அமையும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





