
கிளிநொச்சி, மார்ச் 24
கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக சொகுசு கார் ஒன்று வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
எனினும் காரில் பயணித்த சிரேஸ்ட சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





