நெல் ஆலையை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை – ஆலை ஊழியர்கள் கவலை

நாட்டில் நெல் விலை அதிகரிப்பால் குறித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து ஆலையை நடத்துவது கடினமாக உள்ளதாக ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வழமையாக நான்கு தொட்டிகளிலும் நெல் காணப்படும்.வேலையும் எமக்கு கிடைக்கும்.

தற்போது நெல்லின் விலை அதிகரிப்பாலும்,தட்டுப்பாட்டாலும்,எமக்கு தினமும் இப்போது வேலை கிடைப்பதில்லை.

அன்றாடம் உழைத்து தான் சாப்பிடுகின்றோம்.நெல் இப்போது இல்லை.

ஆகவே ஒன்று விட்ட ஒருநாள் வேலை கிடைக்கிறது.நெல்லை எமக்கு விலை குறைவாக தர வேண்டும்.

இன்று 190 ரூபாய்க்கு அரிசி விலை செல்கிறது.எப்படி மக்கள் இதை வாங்கி சாப்பிட முடியும்.

அதிக விலைக்கு நெல்லை வாங்கி எம்மாலும் ஆலையை நடத்த முடியாது.90 ரூபாய்க்கு வாங்கிய அரிசி இப்போது என்ன விலை என்று தெரியும்.

இந்த நிலை நீடித்தால் ஆலையை இழுத்து மூடவேண்டி வரும் என்றனர்.

Leave a Reply