நாடளாவிய ரீதியில் அதிகரித்த டெங்கு நோய் பரவல்! மக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 12,034 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply