சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை இல்லை – கஜேந்திரன் எம்.பி சபையில் காட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதிகளாக, இன்று வரை வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

மன ரீதியாக பாதிக்கப்பட்ட அவர்கள் பல வருடங்களாக சிறையில் உள்ளனர். அடிப்படை வசதிகள் கூட சரியாக கிடைப்பதில்லை. இப்போது மருத்துவ வசதிகளும் முறையாக வழங்கப்படவில்லை.

சிறையில் உள்ள கைதி ஒருவர், கடந்த 4 ஆம் திகதி பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்டும் இன்றுவரை முறையான சிகிச்சை இல்லாமல் அவதிப்படுகின்றார். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை வேண்டும்.

இதை இங்குள்ள கோட்டபாய, மகிந்தவின் சகோதரர்கள் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

Leave a Reply