பாராளுமன்றம் வராத கப்ரால்: ஆத்திரமடைந்த ஹர்ஷ டி சில்வா

கொழும்பு, மார்ச் 24

அரச வங்கியொன்று வங்குரோத்து நிலையில் காணப்படுவதாக இன்று காலை தகவல் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று  அவர் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறு இருந்தால், அது ஒரு பேரழிவாகவும், ஒரு பேரழிவின் தொடக்கமாகவும் இருக்கலாம் என்று அவர் கூறினார். நாட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்க நிதி அமைச்சரோ அல்லது பொறுப்பான எவரும் ஒருபோதும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்

Leave a Reply