ஒரு இனமே இல்லாமல் போய்விட்டதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை

தலை முடியை பிடித்து இழுத்து,பெண்களைத் தாக்கியவர்களுக்கு அம்மா இல்லையா? சகோதரிகள் இல்லையா? என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற கொடுமையை இந்த உலகமே பார்த்தது.

இறுதி யுத்தத்தில் எங்கள் உறவுகளை மகிந்த அரசிடம் நாமே ஒப்படைந்தோம்.

இன்று வரை அவர்கள் எங்கே என்று தெரியவில்லை.ஒப்படைத்தவர்களிடம் தான் நாம் சென்று கேட்கமுடியும்.

இவ்வாறு எங்களின் உறவுகள் எங்கே என்று கேட்கச் சென்றவர்களை அடித்து ,மானபங்க படுத்தியுள்ளனர்.

இலங்கைப் பொலிஸார்.ஏன் அவர்களுக்கு அம்மா,சகோதரரிகள் இல்லையா? இறுதிப் போரில் ஒரு லட்சம் உறவுகள் கொல்லப்பட்டனர்.ஒரு இனமே இல்லாமல் போய்விட்டது- என்றனர்.

Leave a Reply