எரிபொருளுக்கு தட்டுபாடு : அதிகரிக்கும் தீ விபத்துக்கள்

கொழும்பு, மார்ச் 25

வீடுகளிலும், வெவ்வேறு இடங்களிலும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை களஞ்சியப்படுத்துவதால் திடீர் தீ விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அந்த வகையில், நாளொன்றுக்கு சுமார் 4 பேர், எரிபொருளுடன் தொடர்புடைய தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்த்ரிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், தேங்காய் எண்ணெய் என்பனவற்றை மாற்றிப் பயன்படுத்துவதால் அல்லது தீ மூட்டும்போது பெட்ரோலைப் பயன்படுத்துவதால், அதனுடன் தொடர்புடைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், கடந்த தினங்களில் சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

எனவே, வீடுகளில் பெட்ரோலை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்ட்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர் கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply