யாழில் குடும்ப அட்டையுடன் வரிசையில் நிற்கும் பெண்கள்!

யாழ்ப்பாணம் – சித்தன்கேணி எரிபொருள் நிலையத்தில் இன்றைய தினம் காலை மக்கள் குடும்ப அட்டைகளுடனும், கேன்களுடனும் வரிசையில் நின்று எரிபொருளினை கொள்வனவு செய்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்த விடயம் தொடர்பில் “சமூகம் மீடியா”வுக்கு நுகர்வோர் கருத்து தெரிவிக்கையில்:

ஒரு குடும்ப அட்டைக்கு 500 ரூபாய் பெறுமதியான எரிபொருளினை கொள்வனவு செய்வதாகவும் அதனை பெறுவதற்கு அதிகாலையிலேயே வரிசையில் நின்று சிரமப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

எரிபொருளின் தட்டுப்பாடினால் இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன் இரசாயன உரம் இல்லாததால் பயிர்ச்செய்கை நடவடிக்கை குறைந்தளவில் மேற்கொள்வதனால் தங்களது அன்றாட வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

Leave a Reply