
நாட்டு மக்களுக்கு, நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் முக்கிய அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
வீட்டில் உள்ளவர்கள் , சிறுவர்கள் . பெண்கள் , குழந்தைகள் , பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் , பணிபுரியும் பெண்கள் , ஆண்கள் உட்பட அனைத்து மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .
விலை உயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.
விலை உயர்ந்த நெக்லஸ்கள் , வளையல்கள் , காதணிகள் மற்றும் உங்கள் பெறுமதியான கைப்பைகளை அணியாமல் கவனமாக இருங்கள் .
ஆண்கள் விலையுயர்ந்த கடிகாரங்கள் , விலையுயர்ந்த வளையல்கள் மற்றும் செயின்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் .
உங்கள் மதிப்புமிக்க மொபைல் போனை பொது இடங்களில் பயன்படுத்தாதீங்கள் .
பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதை குறைக்க முயற்சிக்கவும் .
வாகனத்தில் அந்நியர்களை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கவும் .
தேவையான அளவுக்கு அதிகமாக பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் .
நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டை பாதுகாப்பாக வைத்திருங்கள் .
உங்கள் பெரியவர்கள் , மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தெரிந்துகொள்ள அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள் .
வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் நபர்களுக்கு வீட்டு வாசலில் மணி அடிக்கும் போது பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்துக்கொள்ளவும் , முடிந்தால் பார்சல்கள் அல்லது கடிதங்களைப் பெறும் போது கவனத்துடன் இருக்கவும் .
குழந்தைகளை சீக்கிரம் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





