கொழும்பு வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் மர நடுகை நிகழ்வொன்று இன்று இடம்பெறுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பசுமை இலங்கையின் எண்ணக்கருவுக்கு அமைய, தேசிய ரீதியில் இந்து கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது, கொழும்பு வம்பலபிட்டி வஜ்ஜீரா பிள்ளையார் ஆலய பிரதம குரு சச்சிதானந்த குருக்கள் மற்றும் சிவகுமார குருக்கள் ஆலய நிர்வாகி மற்றும் பிரதமரின் இந்துமத இணைப்பாளர் சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பவானி முகுந்தன் ஆகியோர் கலந்து இந்த மர நடுகை வைபவத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்




