ஹட்டனில் வீதியினை மறித்து வாகன சாரதிகள் போராட்டம்!!!

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த சில மாதங்களாக எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந் நிலையில் பல்வேறு கட்டங்களாக நாட்டிற்கு எரிபொருள்கள் கொண்டு வரப்பட்ட போதும் இன்று வரை பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் எரிபொருள் இன்மையால் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இந் நிலையில் இன்றையதினம்(29) ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கான டீசலினை பெற்றுக்கொள்வதற்காக வாகனசாரதிகள் காலைமுதல் காத்திருந்தனர்.

டீசலினை பெற்றுக்கொள்வதற்காக என காத்திருந்த வாகனச்சாரதிகளுக்கு மாலை வேளை டீசல் முடிவடைந்துவிட்டதாக அறிவித்ததை தொடர்ந்து சாரதிகள் மாலை 7.45 மணியளவில் மறித்து சுமார் 8.15 வரை ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,

பகல் முதல் டீசல் பெற்றுக்கொள்வதற்காக உணவின்றி நின்று கொண்டிருப்பதாகவும் தற்போது டீசல் இல்லையென தெரிவிப்பதாகவும் நாளை டீசல் பெற்றுக்கொள்ள வந்தால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்ததுடன் டீசல் பெற்றுக்கொடுக்கும் வரை தாங்கள் வீதியினை மறித்து போராடப்போவதாகவும் கூறினர்.

வாகன சாரதிகளின் போராட்டம் காரணமாக அவ் வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஹட்டன் பொலிஸார் கொட்டகலை எண்ணை விநியோகிக்கும் எண்ணை கூட்டுத்தாபனத்துடன் பேசி நாளை 9 மணியளவில் டீசல் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்ததனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply